தேவையான பொருட்கள் :
* பண்ணைக்கீரைஒரு கட்டு
* காய்ந்த மிளகாய்4
* தேங்காய்த் துருவல்அரை கப்
* சின்ன வெங்காயம்6
* உப்புதேவைக்கேற்ப
தாளிக்க :
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - அரை டீஸ்பு+ன்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை :
கீரையை அளசி பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பை தாளிக்கவும்.
இவற்றுடன் வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, சேர்த்து சிறு தீயில் கடாயை மூடி வைத்து வேகவிடவும்.
நன்கு வெந்தவுடன், மூடியை எடுத்து விட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கினால் பண்ணைக்கீரை பொரியல் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பண்ணைக்கீரை பொரியலை தயிர; சாதம், ரச சாதம் மற்றும் பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை