தேவையான பொருட்கள் :

                 * சின்ன வெங்காயம் 15 (நறுக்கியது)

                 * துவரம் பருப்பு 50 கிராம்

                 * தக்காளி 1

                 * சாம்பார் பொடி அரை டேபிள் ஸ்பூன்

                 * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

                 * புளி நெல்லிக்காய் அளவு

                 * பெருங்காயம் 3 சிட்டிகை

                 * கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி

                 * உப்பு தேவைக்கேற்ப

அரைக்க :

                   * தேங்காய் துருவல் - கால் கப்

தாளிக்க :

                  * நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

                  * கடுகு - 1 டீஸ்பூன்

                  * உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

                  * சின்ன வெங்காயம் - 4

                  * கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை :

                  புளியை தண்ணீரில் ஊற வைத்து 1 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

                  தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

                  தாளிக்க கொடுத்துள்ள வெங்காயத்தை மட்டும் நறுக்கி கொள்ளவும். மற்ற வெங்காயத்தை நறுக்க தேவையில்லை.

                  தேங்காயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

                 அதன் பிறகு குக்கரில் துவரம் பருப்பு போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் பெருங்காயம் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.

                  வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி எடுத்து வைக்கவும்.

                  அதே வாணலியில் நல்லெண்ணை ஊற்றி தக்காளியை போட்டு நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.

                   பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கரைத்த புளித் தண்ணீருடன் சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். மசாலா வாசனை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

                  கடைசியாக வேக வைத்த பருப்பை சேர்த்து கொதி வந்ததும் கொத்த மல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

                 மறுபடியும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். பின்பு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி நன்கு கலந்து விடவும். வெங்காய சாம்பார் ரெடி.

வெங்காய சாம்பார் செய்முறை

கருத்துகள் இல்லை