தேவையான பொருட்கள்:
* மணத்தக்காளிக் கீரை1 கட்டு
* பெரிய வெங்காயம்2 (நறுக்கியது)
* தக்காளி2
* பூண்டுப் பல்4
* பச்சை மிளகாய்2
* மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
* சீரகத்தூள்அரை டீஸ்பூன்
* மிளகுத்தூள்கால் டீஸ்பூன்
* பாசிப்பருப்பு1 கப்
* உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
தாளிக்க:
* சீரகம் - அரை டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் வற்றல் - 2
* தேங்காய் துருவல் - 1 கப்
செய்முறை :
பாசிப்பருப்பை ஊறவைக்க வேண்டும்.
நறுக்கிய கீரை, பாதி வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், ஊறிய பாசிப்பருப்பு சேர்த்து, அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.
குக்கரை திறந்து மத்து அல்லது அகப்பை கொண்டு கடைந்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
நறுக்கிய மீதி பாதி வெங்காயம் போட்டு வதக்கவும். கடைந்த கீரையில் சிறிது உப்பு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி வைத்து, அதனுடன் தாளித்ததை சேர்க்கவும்.
பின்பு நன்கு கீரையை கலந்து விடவும். உப்பு சரி பார்க்கவும். சுவையான சத்தான மணத்தக்காளிக் கீரை கூட்டு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்
கருத்துகள் இல்லை