தேவையான பொருட்கள்:
* கரிசலாங்கண்ணி கீரை1 கட்டு
* அரிசி மாவு1 கப்
* தக்காளி1
* சாமை மாவு1 கப்
* சீரகம்அரை டீஸ்பூன்
* தோசை மாவு1 கப்
* உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
கரிசலாங்கண்ணி கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, சாமை மாவு, தோசை மாவு போட்டு நன்றாக கலந்து ஊற வைக்க வேண்டும்.
ஊறவைத்தவற்றை நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க விடவேண்டும். அதில் சீரகம், கீரை, தேவையான அளவு உப்பு, தக்காளி சேர்த்து அரைத்துக் கரைக்க வேண்டும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி காய்ந்ததும் மாவை தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இந்த தோசை மிகவும் சத்தானது.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சட்னி, சாம்பார், குருமா
கருத்துகள் இல்லை