தேவையான பொருட்கள் :
* பப்பாளிப் பழ துண்டுகள்3 கப்
* சர்க்கரை முக்கால் கப்
* நெய்4 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் அரை கப்
* ஏலக்காய் பொடி1 டீஸ்பூன்
* முந்திரி 7
* பாதாம் பருப்பு7
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள். பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விட வேண்டும்.
பப்பாளி குழையும் போது, அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவர வேண்டும்.
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்போது முந்திரி, பாதாம், ஏலக்காய் பொடி தூவி கிளறி இறக்க வேண்டும். பப்பாளி பழ அல்வா தயார்.
கருத்துகள் இல்லை