தேவையான பொருட்கள்:
* பச்சை பட்டாணி100 கிராம்
* வெங்காயம்15
* தக்காளி2
* கறிவேப்பிலை1 கொத்து
* சீரகம்1 டீஸ்பூன்
* சாம்பார் தூள்அரை டேபிள் ஸ்பு+ன்
* தேங்காய் துருவல்அரை கப்
தாளிக்க:
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - கால் டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து சிறிது வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
பின் சாம்பார் தூள் போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 1 நிமிடம் வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். நன்கு ஆறியபின் இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதனுடன் ஊறவைத்த பட்டாணியையும் சேர்த்து 3 நிமிடம் சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த மசாலாவை அதனுடன் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். பட்டாணி குழம்பு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சப்பாத்திக்கு தொட்டும், சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை