தேவையான பொருட்கள் :
* சிறுகீரை 1 கட்டு
* துவரம் பருப்பு அரை கப்
* கடலைப்பருப்பு அரை கப்
* உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் 2
* புளி எலுமிச்சை அளவு
* சாம்பார் பொடி அரை டேபிள் ஸ்பூன்
* கடுகு ஒரு டீஸ்பூன்
* வெந்தயம் ஒரு டீஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
கீரையை சிறிது எண்ணெயில் வதக்கவும்.
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
புளியைக் கரைத்து அதனுடன் சாம்பார் பொடி சேர்க்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பு விழுதை சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
கரைத்து வைத்த புளிக்கரைசல் சேர்த்து சாம்பார் கலவையை கொதிக்கவிட்டு வதக்கிய கீரை, வேக வைத்த உருண்டைகளை சேர்க்கவும்.
பிறகு சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து கொட்டி இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை