தேவையான பொருட்கள் :

                  * காலிப்ளவர் 1

                  * மைதா மாவு 2 டேபிள் ஸ்பூன்

                  * கார்ன்ப்ளார் 1 டேபிள் ஸ்பூன்

                  * தனியா தூள் ஒரு டேபிள் ஸ்பூன்

                  * உப்பு தேவைக்கேற்ப

                  * குடை மிளகாய் ஒன்று

                  * மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

                  * இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி

                  * தக்காளி சாஸ் 3 டேபிள் ஸ்பூன்

                  * வெங்காயம் 2

                  * மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்

                  * பூண்டு பல் 8

                  * எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :

                    பூண்டை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

                    ஒரு தட்டில் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சுடு தண்ணீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

                    பின்னர் எடுத்து தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் மைதாமாவு, கார்ன்ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

                   வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

                   வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.

                   நிறம் மாறியதும் அதில் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு போட்டு வதக்கி விட்டு அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டிவிட்டு வதக்கவும்.

                  இஞ்சி பூண்டு வாசனை அடங்கி, குடைமிளகாய் மற்றும் வெங்காயம் வதங்கியதும் தக்காளிசாஸ் ஊற்றி தனியா தூள் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.

                  5 நிமிடம் கழித்து பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு நன்கு கிளறி விடவும்.

                 பிறகு 3 அல்லது 5 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.

                             சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.

கோபி மஞ்சூரியன் செய்முறை

கருத்துகள் இல்லை