தேவையான பொருட்கள் :

              * சிறு கீரை 2 கட்டு

              * துவரம் பருப்பு ஒரு கப்

              * தக்காளி 2

              * பச்சை மிளகாய் 4

              * பூண்டு பல் 10

              * புளி எலுமிச்சை அளவு

              * பெருங்காயம் 1 சிட்டிகை

              * மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

              * உப்பு தேவைக்கேற்ப

              * சீரகம் கால் டீஸ்பூன்

              * எண்ணெய் தேவைக்கேற்ப

              * கடுகுஒரு டீஸ்பூன்

              * உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்

              * வெந்தயம்கால் டீஸ்பூன்

              * காய்ந்த மிளகாய் 2

              * வெங்காயம் 15

              * கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை :

                 துவரம் பருப்பைக் கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

                 கீரையை தண்ணீரில் நன்றாக அலசி சுத்தமாக எடுத்து வைக்கவும்.

                 புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

                 ஒரு பாத்திரத்தில் ஊறிய பருப்பைப் போட்டு அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், தோலுரித்த பூண்டு, மஞ்சள் தூள், சீரகம் மற்றும் பெருங்காயம் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

                 பருப்பு நன்கு வெந்தவுடன் சுத்தம் செய்த கீரையைக் கொட்டி, நன்கு கிளறிவிட்டு மூடி போடாமல் வேகவிடவும்.

                 கீரை நன்கு வெந்தவுடன் நீரை வடித்து விட்டு உப்பு சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.

                 பிறகு புளிக் கரைசல் மற்றும் வடித்து வைத்த நீர் சேர்த்து நன்கு கலக்கவும். சற்று கெட்டியாக இருக்க வேண்டும். ஆகவே மேற்கொண்டு நீரை ஊற்றக் கூடாது. புளியை ஊற்றிய பிறகு குழம்பை கொதிக்க வைக்கவும் கூடாது.

                 வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், வெந்தயம், கறிவேப்பில்லை போட்டு தாளித்து குழம்பில் கொட்டவும். சுவையான கீரைக் குழம்பு தயார்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதத்துடன் இந்தக் கீரைக் குழம்பும், வஞ்சரக் கருவாடு வறுவலும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

சிறுகீரை குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை