தேவையான பொருட்கள் :
* அரைக்கீரை 1 கட்டு
* துவரம் பருப்பு அரை கப்
* சின்ன வெங்காயம் 10
* பச்சை மிளகாய் 2
* சீரகம் அரை டீஸ்பூன்
* சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன்
* புளி நெல்லிக்காய் அளவு
தாளிக்க
* கடுகு - அரை டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
கீரையை அலசி அதனுடன் துவரம்பருப்பு, சீரகம், வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து தண்ணீருடன் வேகவைக்கவும்.
5 நிமிடம் கழித்து சாம்பார் பொடி, புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் இறக்கி தண்ணீரை கொஞ்சம் இறுத்து வைத்து கீரையை நன்றாக கடையவும்(மசிக்கவும்).
பின் வேறு வாணலியில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வரமிளகாயட், கறிவேப்பிலை போட்டு மசித்த கீரையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பை போட்டு உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். பருப்பு சேர்த்த அரைக்கீரை குழம்பு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து குழம்புடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை