தேவையான பொருட்கள் :
* பட்டை 1 (சிறியது)
* பிரியாணி இலை1
* பெரிய வெங்காயம்1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு பல்3
* கிராம்பு3
* உப்புதேவைக்கேற்ப
* மிளகுத்தூள்அரை டீஸ்புன்
* சோள மாவு2 டேபிள் ஸ்புன்
* காய்ச்சிய பால்கால் லிட்டா;
தாளிக்க :
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - 1 டீஸ்புன்
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் பசலைக்கீரை சேர்த்து 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி விட வேண்டும்.
பிறகு அதில் உள்ள பட்டை, கிராம்பு ஆகியவற்றை எடுத்துவிட்டு, மீதமுள்ளதை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின்னர்; சோள மாவை, பாலில் சேர்த்து கலந்து, சூப்புடன் சேர்த்து, 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பசலைக்கீரை சூப் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பசலைக்கீரை சூப்பு காலை அல்லது மாலை நேர சிற்றுணவுக்கு உகந்ததாக இருக்கும்.
கருத்துகள் இல்லை