தேவையான பொருட்கள் :
* சிறுகீரை அரை கட்டு
* அரிசி மாவு கால் கப்
* வெண்ணெய் ஒரு டீஸ்பூன்
* வறுத்து அரைத்த உளுத்தமாவு ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை 2 கொத்து
* மிளகாய்த்தூள்1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசி மாவுடன் வெண்ணெய், உப்பு, உளுத்தமாவு, பொடியாக நறுக்கிய கீரை, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
ஒரு பிளாஸ்டிக் தட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை அதில் வைத்து, சிறிய தட்டைகளாக தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டைகளை சேர்த்து பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான சிறுகீரை தட்டை ரெடி.
கருத்துகள் இல்லை