தேவையான பொருட்கள் :
* கொத்தமல்லி தழை 1 கட்டு
* மிளகாய் வற்றல் 5
* புளிஎலுமிச்சை அளவு
* பெருங்காயத்தூள் 2 சிட்டிகை
* கடுகு1 டீஸ்பூன்
* வெந்தயம் 1 டீஸ்பூன்
* எண்ணெய்தேவைக்கேற்ப
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
கடுகையும், வெந்தயத்தையும் தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். பின் அதை நன்றாக பொடித்து வைக்கவும். மிளகாய் வற்றல் மற்றும் புளியை ஊற வைக்கவும்.
பின் கொத்தமல்லி தழை உடன் சேர்த்து அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த வைத்து இருந்த விழுதை போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்.
பின் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். கெட்டியாக வந்த பிறகு பொடித்தவை சேர்த்து நன்றாக கிளறவும்.
சிறிது நேரம் ஆறிய பிறகு பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம், தோசை உடன் சேர்த்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை