தேவையான பொருட்கள் :

                    * வெங்காயம் 2(நறுக்கியது)

                    * நன்கு புளித்த தோசை மாவு ஒரு கப்

                    * கடுகு கால் டீஸ்பூன்

                    * கடலைப்பருப்பு கால் டீஸ்பூன்

                    * காய்ந்த மிளகாய் 4

                    * கறிவேப்பிலை 2 கொத்து

                    * எண்ணெய் தேவைக்கேற்ப

                    * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                  வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

                  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

                  பின்பு வதக்கியவற்றை எடுத்து நன்கு புளித்த தோசை மாவில் சேர்த்து, அதனுடன் உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

                  தேவைப்பட்டால் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.

                  இந்த மாவை தோசைக்கல்லில் ஊற்றி, முறுகலாக சுட வேண்டும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வேகவைக்க வேண்டும். சுவையான வெங்காய தோசை தயார்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சட்னி மற்றும் பருப்புபொடி தொட்டு சாப்பிடலாம்.

                குறிப்பு : இந்த தோசையின் மேல் இட்லிப் பொடியை தூவினால் அது பொடி தூவிய தோசை ஆகும்.

வெங்காய தோசை செய்முறை

கருத்துகள் இல்லை