தேவையான பொருட்கள் :

                * புளிச்சக்கீரை1 கட்டு

                * புளிஎலுமிச்சை அளவு

                * மிளகாய் பொடி1 டேபிள் ஸ்பூன்

                * தனியா பொடி1 டேபிள் ஸ்பூன்

                * மஞ்சள் பொடிஅரை டீஸ்பூன்

                * பச்சை மிளகாய்4

                * மிளகாய் வற்றல்2

                * கசகசா2 டீஸ்பூன்

                * தேங்காய் துருவல்1 கப்

                * தக்காளி4

                * பன்னீர்100 கிராம்

                * வெந்தயம்அரை டீஸ்பூன்

                * உப்பு, எண்ணெய்தேவையான அளவு

செய்முறை :

                 புளியை தேவையான தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளிச்சக்கீரையை ஆய்ந்து கொள்ளவும். சிறிது எண்ணெயில் கசகசாவை வறுத்து அதனோடு தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து கீரை, தக்காளி சேர்த்து வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து புளித் தண்ணீரில் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

                 குழம்பில் மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, சேர்க்கவும். பன்னீரை விரல் போல் இரண்டங்குல நீளத்தில் நறுக்கி தண்ணீரில் அலசி விட்டுப் பிழிந்து சிறிது எண்ணெயில் சிவக்க வறுக்க வேண்டும். கடாயில் மீதி எண்ணெயைக் காய விட்டு வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து குழம்பைச் சேர்த்து மூடி கொதிக்க விட வேண்டும்.

                 கொதித்து பொடி வாசனை அடங்கியதும் பொரித்து வைத்துள்ள பன்னீரை சேர்த்துக் கிளறி இறக்கி கொத்தமல்லி தூவ வேண்டும். சுவையான புளிச்சக்கீரை பன்னீர் மசாலா குழம்பு தயார்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, அடை, ஆப்பம், பொங்கல்.

புளிச்சக்கீரை பன்னீர் மசாலா குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை