தேவையான பொருட்கள்:

                * அரிசி2 கப்

                * தேங்காய் பால்1 கப்

                * பெரிய வெங்காயம்1

                * எலுமிச்சை சாறு1 டீஸ்பூன்

                * மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்

                * உப்புதேவைக்கேற்ப

அரைக்க:

                  * புதினா இலை - 2 கப்

                  * கொத்துமல்லி இலை - அரை கப்

                  * பச்சை மிளகாய் - 2 -3

                  * இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

தாளிக்க:

                * எண்ணெய் - தேவைக்கேற்ப

                * பட்டை - 2

                * கிராம்பு - 2

                * முழு ஏலக்காய் - 2

                * பிரியாணி இலை - 1

                * சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :

                அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

                 புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

                 குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிhpயாணி இலை, சோம்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்க வேண்டும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

                 பின்னர் அதில் அரிசியை தண்ணீரை நன்றாக வடித்து விட்டு போட வேண்டும். அத்துடன் தேங்காய் பால், மூன்று கப் தண்ணீர் (தேங்காய் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.) விட்டு கிளறி விட வேண்டும். மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்க வேண்டும்.

                 சற்று ஆறிய பின் குக்கரைத் திறந்து, எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து கிளற வேண்டும்.

                அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாற வேண்டும். புதினா கீரை சாதம் ரெடி.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : குருமா

புதினா கீரை சாதம் செய்முறை

கருத்துகள் இல்லை