தேவையான பொருட்கள் :
* அகத்திக்கீரை ஒரு கட்டு
* சின்ன வெங்காயம் 10
* வரமிளகாய் 3
* சீரகம் அரை டீஸ்பூன்
* தேங்காய்த் துருவல் அரை கப்
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
* கடுகு 1 டீஸ்பு+ன்
* உளுத்தம்பருப்பு 1 டீஸ்புன்
* மஞ்சள் தூள் 1 டீஸ்புன்
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், வரமிளகாய், கீரையைப் போட்டு வதக்கி மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.
அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதத்தில் அப்பளத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை