தேவையான பொருட்கள் :
* காசினி கீரை1 கட்டு
* பச்சை மிளகாய் 3
* புளி நெல்லிகாய் அளவு
* இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
* வெங்காயம் 3
* உப்புதேவைக்கேற்ப
* தேங்காய் துருவல் 1 கப்
தாளிக்க :
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
வாணலியில் எண்ணையை ஊற்றி இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் காசினி கீரையை சேர்த்து வதக்கவும்.
அதோடு தேங்காய் துருவல் சேர்க்கவும். பின் சிறிது நேரம் வதக்கியதை ஆற வைக்கவும்.
ஆறிய பின் புளி மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும்.
சுவையான குமட்டிகீரை சட்னி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: தோசை, இட்லி சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை