தேவையான பொருட்கள் :
* சண்டிக்கீரை 1 கட்டு
* எண்ணெய்தேவைக்கேற்ப
* கடுகுகால் டீஸ்பூன்
* துவரம் பருப்பு கால் கப்
* தேங்காய் துருவல்அரை கப்
* மிளகாய் வற்றல் 2
* சீரகம்அரை டீஸ்பூன்
* மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் இலை, கடுகு, எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கீரையின் நடுவில் உள்ள காம்பை எடுத்து விட்டு ஒரு பலகையின் மீது வைத்து இலையின் பின்புறத்தில் இந்த அரைத்த விழுதை மெலிதாக தடவ வேண்டும்.
இலையை மெலிதாக நெருக்கமாக சுருட்டி 20 நிமிடம் ஆவியில் வேக விடவும்.
வெந்த பிறகு அவற்றை எடுத்து வட்ட வடிவமாக சிறிது மொத்தமாக துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கின துண்டுகளாக போட்டு 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை