தேவையான பொருட்கள் :
* அரைக்கீரை ஒரு கட்டு
* பெரிய வெங்காயம் 1
* அரிசி மாவு 2 டீஸ்பூன்
* கடலை மாவு அரை கப்
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஒன்று
* இஞ்சி 2 டீஸ்பூன் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் 2
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய கீரை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாயை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, வதக்கிய கீரை கலவையுடன் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கடலை மாவுடன் சிறிதளவு உப்பு, அரிசி மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, கரைத்து வைத்த மாவில் உருண்டைகளை தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும். இப்போது சுவையான அரைக்கீரை போண்டா ரெடி.
கருத்துகள் இல்லை