தேவையான பொருட்கள் :
* வெங்காயத்தாள் 1 கட்டு
* தக்காளி 1
* பெரிய வெங்காயம் 1
* மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்
* மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
* கடுகு கால் டீஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* கறிவேப்பிலை 1 கொத்து
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெட்டிய வெங்காயத்தாள், நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கால் கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி வெங்காயத்தாள் வெந்ததும் இறக்கவும். சுவையான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து இந்த பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை