தேவையான பொருட்கள் :
* காலிஃப்ளவர்ஒன்று
* உரித்த பச்சைப் பட்டாணிஅரை கப்
* துவரம்பருப்புகால் கப்
* சாம்பார் பொடி2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* கறிவேப்பிலை2 கொத்து
* உப்புதேவைக்கேற்ப
வறுத்து அரைக்க:
* பெருங்காயம் - 1 சிட்டிகை
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* தனியா - 2 டேபிள் ஸ்பூன
* காய்ந்த மிளகாய் - 3
* துருவிய தேங்காய் - கால் கப்
தாளிக்க :
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
காலிஃப்ளவரை சிறிது உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் போட்டு வைத்து பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் காலிஃப்ளவரையும், பட்டாணியையும் போட்டு மூழ்கும் வரை நீர் விட்டு வேக விடவும். தேவையான அளவு உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்க்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும். அவற்றுடன் தேங்காயை சேர்த்து நைசாக அரைக்கவும். காலிஃப்ளவர் நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் வெந்த துவரம்பருப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் இறக்கி வைத்து, எண்ணெயில் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு சேர்த்து கூட்டில் கொட்டி நன்கு கலக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும்.
சுவையான காலிஃப்ளவர் கூட்டு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சப்பாத்தியுடனும், சாதத்துடனும் சேர்த்து சாப்பிட இந்தக் கூட்டு அருமையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை