தேவையான பொருட்கள்:
* பெரிய நெல்லிக்காய்முக்கால் கிலோ
* மிளகாய் தூள்1 டேபிள் ஸ்பூன்
* புளிஎலுமிச்சை அளவு
* கடுகு, மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை 1 கொத்து
* பெருங்காயம்1 கைப்பிடி
* கடுகுப்பொடிஅரை டீஸ்பூன்
* நல்லெண்ணெய், உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி, அதில் நெல்லிக்காயைப் போட்டு குக்கரில் வைத்து வெய்ட் போடாமல் அடுப்பில் 15 நிமிடம் வைக்க வேண்டும்.
பிறகு எடுத்து ஆற வைத்து, கொட்டைகளை நீக்கி புளி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம், அரைத்த விழுது, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளற வேண்டும்.
கடைசியாக கடுகு பொடியை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : துவையல், சாதம், இட்லி, தோசை.
கருத்துகள் இல்லை