தேவையான பொருட்கள் :
* நெல்லிக்காய்கால் கிலோ
* வரமிளகாய்20
* உப்பு, நல்லெண்ணைய்தேவைக்கேற்ப
* மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
* பெருங்காயம் 2 சிட்டிகை
* வெந்தயம் 2 டீஸ்பூன்
* கடுகு2 டீஸ்பூன்
செய்முறை :
நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பத்து நிமிடங்கள் மூடிவைத்து நீரை வடிக்க வேண்டும்.
உப்பு, வர மிளகாயை காயவைத்து பொடி செய்து நெல்லிக்காயில் சேர்த்து கலக்க வேண்டும். நல்லெண்ணையில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்துக் கொட்டி, நன்றாக கலந்து, காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்துவைக்க வேண்டும்.
கிலோ கணக்கில் நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும்போது நறுக்கிய காயின் அளவு எட்டுக்கு ஒன்று என்ற அளவில் மிளகாய் தூளும், உப்பும், காரத்தின் அளவுக்கு முக்கால் பாகம் அல்லது அதற்கு மேலும்கூட எண்ணெயும் தேவை.
நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்க வேண்டும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தோசை, சாதம்.
கருத்துகள் இல்லை