தேவையான பொருட்கள் :
* சிறுகீரை 1 கட்டு
* துவரம் பருப்பு 1 கப்
* பெருங்காயம் 2 சிட்டிகை
* சீரகம் 1 டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* கடுகு 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய்2
* நெய் 1 டீஸ்பூன்
செய்முறை :
பருப்பை 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
நறுக்கிய கீரையை நன்றாக மண் போக அலசி அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்.
அதனுடன் சீரகம், பெருங்காயம், உப்பு, சேர்க்கவும். கீரை வெந்தவுடன் பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் எடுத்து தயிர் கடையும் மத்தினால் மசித்துக் கொள்ளவும்.
பிறகு 1 டீஸ்பூன் நெய்யில் கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து பருப்பு மசியலோடு சேர்த்து இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை