தேவையான பொருட்கள் :
* அரைக்கீரை 1 கட்டு
* பாசிப் பருப்பு100 கிராம்
* பெரிய வெங்காயம் 1
* சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயம் 1 சிட்டிகை
* மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
அரைக்க
* தேங்காய் துருவல் - அரை கப்
* சின்ன வெங்காயம் - 4
* தக்காளி - 1
தாளிக்க
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை :
முதலில் கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தமாக கழுவி வைக்கவும். கழுவிய கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பருப்பு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
அதே பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாசம் போனதும் கீரையை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
பிறகு வேக வைத்த பருப்பு, தேங்காய் விழுது எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் தாளித்ததை கீரையில் சேர்க்கவும். சுவையான அரைக்கீரைக்கூட்டு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கூட்டுடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை