தேவையான பொருட்கள்:
* பச்சை பட்டாணி1 கப்
* பெரிய வெங்காயம்1
* தக்காளி1
* பச்சை மிளகாய்3
* இஞ்சி பூண்டு விழுதுஅரை டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய்1
* மல்லித் தூள்அரை டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள்கால் டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலாகால் டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
* கடுகுகால் டீஸ்பூன்
* உப்புதேவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய்தேவைக்கேற்ப
* கறிவேப்பிலை1 கொத்து
* கொத்தமல்லி இலை1 கைப்பிடி
செய்முறை :
முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்க்கவும். பிறகு பட்டாணி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை