தேவையான பொருட்கள்:
* கொத்தமல்லிதழை1 கட்டு
* சின்ன வெங்காயம்5
* பெரிய வெங்காயம்3
* தக்காளி3
* மிளகாய்வற்றல்3
* மிளகுஅரை டீஸ்பு+ன்
* தனியா1 டேபுள் ஸ்பூன்
* சீரகம்1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
* புளிஎலுமிச்சை அளவு
* கடுகுஅரை டீஸ்பூன்
* எண்ணெய்தேவைக்கேற்ப
* கடலைபருப்பு1 டிஸ்பூன்
* உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்
* தேங்காய்துருவல்1 கப்
* மஞ்சள்தூள்அரை டிஸ்பூன்
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி மற்றும் மல்லி இலை சேர்க்கவும்.
வதக்கியதை சிறிது நேரம் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்ததை சேர்த்து கொள்ளவும்.
கொதி வந்த உடன் புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். பின் கொதித்து எண்ணெய் பிரியும் போது இறக்கவும்.
கொத்தமல்லி குழம்பு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை