தேவையான பொருட்கள் :
* சிறுகீரை 1 கட்டு
* பாசி பருப்பு அரை கப்
* உப்பு தேவைக்கேற்ப
* கடுகு 1 டீஸ்பூன்
* எண்ணெய்தேவைக்கேற்ப
* சிறிய வெங்காயம் 10
* பச்சை மிளகாய் 1
* உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்
* பூண்டு பல் 2
* சீரகம் 1 டீஸ்பூன்
செய்முறை :
கீரை, பாசி பருப்பு, சிறிதளவு வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், சீரகம் எல்லாம் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும். பின் எடுத்து மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கி பின் அதனுடன் கறிவேப்பிலை, சிவப்புமிளகாய் போட்டு வதக்கி பின் மசித்து வைத்த கீரை கலவையை கொட்டவும்.
உப்பு சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை