தேவையான பொருட்கள் :
* அரைக்கீரை 1 கட்டு
* சின்ன வெங்காயம் 10
* பச்சை மிளகாய் 2
* மிளகு தூள் 1 டீஸ்பூன்
* பூண்டு பல் 10
* தேங்காய் துருவல் அரை கப்
* கடுகு 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை ஒரு கொத்து
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு கீரையை சேர்த்து வதக்கவும். சிறிது நேரத்தில் கீரையில் உள்ள தண்ணீர் சுண்டியவுடன் உப்பு சேர்த்து வதக்கவும்.
கீரை வெந்தவுடன் அடுப்பை அணைத்து மிளகு தூள் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து இந்த பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை