தேவையான பொருட்கள் :
* தூதுவளை 10 இலைகள்
* மிளகு ஒரு டீஸ்பூன்
* சீரகம் ஒரு டீஸ்பூன்
* பூண்டு பல் 10
* தக்காளி 1
* புளி எலுமிச்சை அளவு
* மிளகாய் வற்றல் 3
* கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி
* கறிவேப்பிலை 2 கொத்து
* பெருங்காயம் 1 சிட்டிகை
செய்முறை :
மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், பூண்டு, இவைகளைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும்.
தக்காளிப் பழத்தை மசித்து புளிக்கரைச்சலோடு சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் தட்டி வைத்த மிளகு, சீரகம், பூண்டு, சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியில் தூதுவளை இலை, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி எடுத்து கொதிக்க வைத்திருக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து ரசத்தை அதில் கொட்டி அதிகம் கொதிக்கவைக்காமல் ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை