தேவையான பொருட்கள் :
* தூதுவளை இலை அரை கப்
* உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு 2 டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய்2
* பெருங்காயம் அரை டீஸ்பு+ன்
* கடுகுஅரை டீஸ்பூன்
* நெய் 2 டீஸ்பூன்
* மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
* சாதம் ஒரு கப்
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தூதுவளை இலையையும் சேர்த்து வறுக்கவும்.
இதை மிக்ஸியில் நைஸாக பொடி செய்யவும்.
வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடுகு தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, தூதுவளை பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
கருத்துகள் இல்லை