தேவையான பொருட்கள் :
* காலிஃப்ளவர்ஒன்று
* சின்ன வெங்காயம்7
* தக்காளிஒன்று
* கொத்தமல்லித் தழைஒரு கைப்பிடி
* கறிவேப்பிலைஒரு கொத்து
* மஞ்சள் தூள்ஒரு டீஸ்பூன்
* உப்புதேவைக்கேற்ப
அரைக்க :
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* சோம்பு - ஒரு டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 4
* வரமிளகாய் - 4
* தனியா - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - ஒரு கப்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தேங்காய் - கால் கப்
* இஞ்சி விழுது - 1
* பூண்டு பல் - 4
* மஞ்சள் விழுது - 1
தாளிக்க :
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைக்கவும். அதில் பெரிய துண்டுகளாக நறுக்கிய காலிஃப்ளவரை நன்கு அலசிவிட்டு போட்டு வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், சோம்பு, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, வரமிளகாய், தனியா, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி ஆறவைக்கவும். தேங்காயை துருவிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சளில் தோலை நீக்கி வைக்கவும்.
ஆறிய வெங்காயக் கலவையுடன் தேங்காய், மஞ்சள் விழுது, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு வைத்துள்ள காலிஃப்ளவரை எடுத்து நீரை வடித்துவிட்டுச் சேர்த்து வதக்கி, வெங்காயக் கலவையைச் சேர்க்கவும்.
நன்கு கிளறிவிட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் குக்கரை மூடி மேலே ஆவி வந்தவுடன் வெயிட் போடவும். 4 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் குழம்பு ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசை, சாதம்
கருத்துகள் இல்லை