தேவையான பொருட்கள்:
* பொன்னாங்கன்னிக் கீரை1 கட்டு
* பச்சை மிளகாய்3
* நெய்2 டீஸ்பூன்
* புளிஎலுமிச்சை அளவு
* பாசிப்பருப்பு2 கப்
* கடுகு, உளுந்து1 டீஸ்பூன்
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பொன்னாங்கன்னி கீரையை ஆய்ந்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர், கொஞ்சம் உப்பு போட்டு கீரையை வேக வைக்க வேண்டும்.
புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் பச்சை மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு, வேகவைத்த கீரையை பருப்பில் கொட்டி, புளிக்கரைசலை சேர்த்து மத்தால் கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கீழே இறக்க வேண்டும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவு : சாதம்
கருத்துகள் இல்லை