தேவையான பொருட்கள் :

                 * கறிவேப்பிலை 2 கட்டு

                 * புளி எலுமிச்சை அளவு

                 * மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

                 * சிறிய வெங்காயம்15

வறுத்து அரைக்க:

                   * வரமிளகாய் - 4

                   * கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

                   * துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்

                   * உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்

                   * சீரகம் - 1 டீஸ்பூன்

                   * பெருங்காயம் - 2 சிட்டிகை

                   * எண்ணெய் - தேவைக்கேற்ப

தாளிக்க

                * கடுகு - அரை டீஸ்பூன்

                * வெந்தயம் - அரை டீஸ்பூன்

                * நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

                   கறிவேப்பிலையை மொத்தமாக போடாமல், சிறிது சிறிதாய் வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.

                   வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

                    பின் அவற்றுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

                    புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் அரைத்த பொடி, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

                    ஒரு கடாயில் சிறிது எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம், மற்றும் வெங்காயம் சேர்த்து தாளித்து புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

                    இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசை ஆகியவற்றுக்கும் தொட்டுக்கொள்ள இது நன்றாக இருக்கும்.

கறிவேப்பிலை குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை