தேவையான பொருட்கள் :

               * அகத்திக்கீரை 1 கட்டு

               * சிவப்பு மிளகாய் 1

               * சின்ன வெங்காயம் 12

               * தேங்காய்த் துருவல் அரை கப்

               * உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க :

              * எண்ணெய் - தேவைக்கேற்ப

              * கடுகு - 1 டீஸ்பூன்

              * உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

              * கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

                  சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். அகத்திக் கீரையை உருவி, அரிசி களைந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.

                 பின் பொடியாக அரியவும். அரிசி களைந்த நீரை அளவாக ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து விடவும்.

                 வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும்.

                 பின் அதில் அரிந்து வைத்துள்ள சின்னவெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

                 அத்துடன் வெந்த கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து கிளறவும். பின்பு தேங்காய்த் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பொரியல் நன்றாக இருக்கும்.

அகத்திக்கீரை பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை