தேவையான பொருட்கள் :
* கொத்தமல்லி1 கட்டு
* பொட்டு கடலை2 டேபிள் ஸ்பூன்
* சிவப்பு மிளகாய் 3
* பெரியவெங்காயம்3
* தக்காளி 3
* உப்புதேவைக்கேற்ப
* எண்ணெய்தேவைக்கேற்ப
* கடுகு1 டீஸ்பூன்
* உளுந்து3 டீஸ்பூன்
* கறிவேப்பிலை 1 கொத்து
* தேங்காய் துருவல் 1 கப்
செய்முறை :
தேங்காய் துருவல், மல்லி, பொட்டுக்கடலை, மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் விட்டு மிக்ஸ்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதக்கியதும் அரைத்து வைத்து இருந்த மசாலாவையும், உப்பையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லித் தழையை போட்டு இறக்கவும்.
சுவையான கொத்தமல்லி சாம்பார் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை