தேவையான பொருட்கள்:
* கரிசலாங்கண்ணி கீரை1 கட்டு
* தக்காளி2
* சிறிய வெங்காயம்4
* மிளகு, சீரகம்அரை டீஸ்பூன்
* பூண்டுப் பல்6
* கொத்தமல்லி, புதினா ஒரு கைப்பிடி
* மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
* பெருங்காயம்1 சிட்டிகை
* எலுமிச்சை1
* உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
மிளகு, சீரகம், பூண்டு, கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைத் தட்டிப்போட்டு வதக்க வேண்டும்.
பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கீரையையும் நன்கு வதக்க வேண்டும்.
அதனுடன், எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு பிரட்ட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவைத்து இறக்க வேண்டும். சூடான சூப் ரெடி.
கருத்துகள் இல்லை