தேவையான பொருட்கள் :
* காலிஃப்ளவர்ஒன்று
* தக்காளி2
* பச்சை மிளகாய்2
* பட்டாணிஅரை கப்
* பட்டர் பீன்ஸ்அரை கப்
* மிளகாய்த் தூள்ஒரு டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள்ஒரு டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள்ஒரு டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
அரைக்க :
* பெரிய வெங்காயம் - 2
* இஞ்சி விழுது - 1
* பூண்டு பல் - 5
* முந்திரிப்பருப்பு - 6
* பாதாம் பருப்பு - 6
தாளிக்க :
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
செய்முறை :
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி, அத்துடன் தோல் சீவிய இஞ்சி, பூண்டு, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு எடுத்து, சுத்தம் செய்து வைக்கவும்.
ப்ரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் தாளித்து, தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து குழைய வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கிளறவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கரைத்து ஊற்றி கலக்கவும்.
பிறகு சுத்தம் செய்த காலிஃப்ளவர் துண்டுகள், பட்டாணி மற்றும் பட்டர் பீன்ஸை சேர்த்துக் கிளறவும்.
நன்றாகக் கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். ஆறியதும் திறந்து வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
சுவையான காலிஃப்ளவர் குருமா தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சப்பாத்தி, பூரி
கருத்துகள் இல்லை