தேவையான பொருட்கள் :
* புளி ஒரு நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
* உப்பு தேவைக்கேற்ப
அரைக்க :
* பூண்டு பல் - 6
* பச்சை மிளகாய் - 1
* மிளகு - அரை டீஸ்பூன்
* சீரகம் - அரை டீஸ்பூன்
தாளிக்க :
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* காய்ந்த மிளகாய் - 2
* தக்காளி - 1
செய்முறை :
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அந்த புளி கரைசலில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன்பிறகு தக்காளியை சேர்த்த பின்னர், தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் புளிச் கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பூண்டு ரசம் ரெடி!!!
கருத்துகள் இல்லை