தேவையான பொருட்கள் :
* வெங்காயத்தாள் 1 கட்டு (நறுக்கயைது)
* பூண்டு பல் 10
* தக்காளி 1
* வெங்காயம் 10
* கடுகு கால் டீஸ்பூன்
* மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
* வெந்தயம் அரை டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* கறிவேப்பிலை ஒரு கொத்து
* நல்லெண்ணெய் தேவைக்கேற்ப
அரைக்க
* காய்ந்த மிளகாய் - 2
* தேங்காய் துருவல் - கால் கப்
* சீரகம் - கால் டீஸ்பூன்
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பின்பு தேங்காய் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும், பின் நன்றாக கொதித்த பின் இறக்கவும். சுவையான வெங்காயத்தாள் குழம்பு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை