தேவையான பொருட்கள் :

                  * சின்ன வெங்காயம் 10 (நறுக்கியது)

                  * புளி ஒரு நெல்லிக்காய் அளவு

                  * மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

                  * உப்பு தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க:

                  * தனியா - 2 டீஸ்பூன்

                  * கடலை பருப்பு - ஒன்றரை டீஸ்பூன்

                  * வெந்தயம் - அரை டீஸ்பூன்

                  * தேங்காய் துருவல் - கால் கப்

                  * காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க:

                * நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

                * கடுகு - கால் டீஸ்பூன்

                * உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

                * சீரகம் - 1 டீஸ்பூன்

                * வெந்தயம் - அரை டீஸ்பூன்

                * கறிவேப்பிலை - 2 கொத்து

                * பச்சை மிளகாய் - 1

செய்முறை :

                 முதலில் அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் வாணலியில் தனி தனியாக வறுத்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.

                 வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

                 புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

                 வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ளவும். பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.

                 அதனுடன் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

                 குழம்பு வாசனை வந்து சற்று திக்கான பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும். ருசியான வெங்காய குழம்பு ரெடி.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதத்துடன் மற்றும் அப்பளம் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

                 குறிப்பு: வெந்தயம் சேர்த்தால் தான் குழம்பு ருசி கூடும்.

                 இதற்கு தக்காளி சேர்க்க வேண்டாம். தக்காளி, குழம்பின் ருசியை மாற்றி விடும்.

வெங்காய குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை