தேவையான பொருட்கள் :
* கோவக்காய்கால் கிலோ
* வேக வைத்த முட்டை4
* பெரிய வெங்காயம்1
* தக்காளி1
* இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
* கரம் மசாலா தூள்கால் டேபிள் ஸ்பூன்
* சீரக தூள்1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய்2
* கறிவேப்பிலைஒரு கொத்து
* உப்புதேவைக்கேற்ப
* எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
செய்முறை அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுதினை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
கரம் மசாலா தூள் மற்றும் சீரகத் தூள் ஆகியவற்றைப் வகைகள் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்கு கிளறி, உப்பு சேர்த்து லேசாக நீர் தௌpத்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
அதனுடன் வேக வைத்த முட்டையை போட்டு உடையாமல் கிளறி 5 நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதம், சப்பாத்தி மற்றும் தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை