தேவையான பொருட்கள் :
* கேரட்கால் கிலோ
* தோசை மாவு5 கப்
* வெங்காயம்4
* பச்சை மிளகாய்1
* மல்லிப் பொடிஅரை டேபிள் ஸ்பூன்
* மிளகாய் பொடிஅரை டேபிள் ஸ்பூன்
* உப்புதேவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடான பின், அதில் வெங்காயம், பச்சை மிளக்காய், போட்டு மிதமாக வதக்கி, பின் கேரட்டையும் போட்டு லேசாக வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது, மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி தோசை மாவில் கொட்டவும்.
பின்பு மாவை நன்கு கலக்கி தோசைக்கல்லில் ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான கேரட் தோசை ரெடி.
கருத்துகள் இல்லை