தேவையான பொருட்கள் :
* அரிசி2 கப்
* தக்காளி5
* பெரிய வெங்காயம்3
* பச்சை மிளகாய்3
* இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
* கரம் மசாலாத்தூள் 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன்
* சோம்புத் தூள்அரை டேபிள் ஸ்பூன்
* புதினா மற்றும் கொத்தமல்லிஅரை கட்டு(இரண்டும் சம ஆளவு)
தாளிக்க:
* பட்டை - 2
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* தண்ணீர் - 5 கப்
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை நன்கு நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு நீரில் அலசி, அதன் இலைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு, பின்னர் அதில் தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வேண்டிய அளவு சேர்த்து மூடி விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். பின்னர் அதனை ஒரு முறை கிளறி விட்டு, பரிமாறவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தயிர் பச்சடி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, ஊறுகாய், உருளைக்கிழங்கு பொரியல்.
கருத்துகள் இல்லை