தேவையான பொருட்கள் :
* துருவிய சாம்பல் பூசணிகால் கிலோ
* அவல் 1 கப்
* தயிர் 1 கப்
* பச்சை மிளகாய்2 (நறுக்கியது)
* கொத்துமல்லி1 கைப்பிடி
* காய்ந்த மிளகாய்1
* பெருங்காயத்தூள்1 சிட்டிகை
* உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க:
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - அரை டீஸ்பூன்
* உளுந்து - அரை டீஸ்பூன்
செய்முறை :
பூசணித் துருவலில் இருக்கும் தண்ணீரை லேசாகப் பிழிந்து தனியாக வைக்கவும். அவலை லேசாக தண்ணீரில் அலசி பிழிந்து, பூசணியை பிழிந்த தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பிறகு துருவிய பூசணி, ஊறிய அவல், தயிர், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைத்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து தாளித்து, பூசணி கலவையில் கொட்டி கலந்து விடவும்.
இறுதியாக நறுக்கி வைத்த கொத்துமல்லியைத் தூவி பரிமாறலாம்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை