தேவையான பொருட்கள் :
* பாசுமதி அரிசி2 கப்
* தக்காளிகால் கிலோ
* தக்காளிச்சாறு 3 டேபிள் ஸ்பு+ன்
* முந்திரி1 டேபிள் ஸ்பு+ன்
* வெங்காயம்5
* இஞ்சி மற்றும் பூண்டு விழுது1 டேபிள் ஸ்பு+ன்
* பச்சை மிளகாய்6
* பச்சை பட்டாணிகால் கப்
* பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலைதலா இரண்டு
* ஏலக்காய்2
* கிராம்பு 2
* உப்பு, எண்ணெய், நெய்தேவைக்கேற்ப
* தனியா தூள் 2 டீஸ்பு+ன்
* புதினா2 கைப்பிடியளவு
* எலுமிச்சைஅரைப்பழம்
செய்முறை :
பச்சை பட்டாணியை வேக வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தினை சிறியவையாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரியை நீரில் 20 நிமிடம் ஊறாவைத்து அரைத்துக் கொள்ளவும். அரிசியை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு அரிசியிலுள்ள நீரை வடித்து கொட்ட வேண்டும். பின்பு அரிசியில் உள்ள நீர் முற்றிலும் குறையும் வரை மிதமான தீயில் செய்ய வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றவும். பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு கிளற வேண்டும்.
பட்டாணி, தக்காளி சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.கலவையானது கொதிக்கும் நேரத்தில் மிளகாய் தூள், அரைத்த முந்திரி, சர்க்கரை, நெயில் வறுத்த அரிசி, உப்பு, ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் நீர் விட்டு குக்கரை மூடுங்கள்.
ஒரு விசில் வந்ததும் சிறிது நேரம் மிதமான வெப்பத்தில் வைத்து அடுப்பினை நிறுத்தவும். பின்பு எலுமிச்சை சாறினை இதன் மீது ஊற்றி, கொத்தமல்லி தழையை தூவி விடவும்.
விசில் போடாமல் : எரியும் அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து அதன் மேல் குக்கரை வையுங்கள். குக்கரில் வெயிட் போடக்கூடாது. இது தான் தம் போடும் முறை. 20 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறுங்கள்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தயிர் பச்சடி, தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி.
கருத்துகள் இல்லை