தேவையான பொருட்கள் :

                           * கொத்தவரங்காய்கால் கிலோ

                           * கெட்டி மோர் (சற்று புளிப்புடன்)2 கப்

                           * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

                           * உப்புதேவைக்கேற்ப

                           * தண்ணீர்தேவைக்கேற்ப

அரைத்தல் :

                          * தேங்காய் - கால் கப்

                          * பச்சை மிளகாய் - 4

                          * இஞ்சி - அரை டீஸ்பூன்

                          * தனியாத்தூள் - அரை டீஸ்பூன்

                         * சீரகம் - அரை டீஸ்பூன்

தாளித்தல் :

                        * எண்ணெய் - தேவைக்கேற்ப

                        * கடுகு - ஒரு டீஸ்பூன்

                        * வெந்தயம் - கால் டீஸ்பூன்

                        * பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

                        * கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

                           கொத்தவரங்காயை 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தவரங்காயுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

                           மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, தனியா, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

                            அரைத்த விழுதினை வேக வைத்த கொத்தவரங்காயுடன் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

                            அதன் பின் மோரை கொத்தவரங்காயுடன் கலந்து, நுரைக்க கொதித்ததும் இறக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

                            வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து மோர் குழம்பில் சேர்க்கவும். சுவையான கொத்தவரங்காய் மோர் குழம்பு தயார்.

                           இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்திற்கு சேர்த்து சாப்பிடலாம்.

கொத்தவரங்காய் மோர் குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை