தேவையான பொருட்கள் :

                        * கொத்தவரங்காய்கால் கிலோ (நறுக்கியது)

                        * கடலைப் பருப்பு 100 கிராம்

                        * பெரிய வெங்காயம்1 (பொடியாக நறுக்கியது)

                        * பூண்டு பல்6

                        * மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்

                        * மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்

                        * சாம்பார் பொடி கால் டேபிள் ஸ்பூன்

                        * உப்பு தேவைக்கேற்ப

அரைக்க :

                        * தேங்காய் - முக்கால் கப்

                        * சோம்பு - அரை டீஸ்பூன்

                        * பட்டை - 1

                        * கிராம்பு - 1

தாளிக்க :

                         * கடுகு - அரை டீஸ்பூன்

                         * உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

                         * கறிவேப்பிலை - ஒரு கொத்து

                         * எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

                    முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தவரங்காய், கடலைப் பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் அடங்கியதும் குக்கரில் உள்ள நீரை வைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

                    பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

                     பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

                     பின்பு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள காய்கறியை சேர்த்து 2 நிமிடம் அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்க வேண்டும்.

                      பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளறி, மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கினால், கொத்தவரங்காய் பொரியல் ரெடி.

                    இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாம்பார் சாதம், பருப்பு சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.

கொத்தவரங்காய் பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை