தேவையான பொருட்கள் :
* கோவக்காய்அரை கிலோ
* பெரிய வெங்காயம்2
* சாம்பார் பொடி1 டேபிள் ஸ்பூன்
* நிலக்கடலைகால் கப்
* எலுமிச்சை சாறு1 டீஸ்பூன்
* எண்ணெய்தேவைக்கேற்ப
* கடுகு1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு2 டீஸ்பூன்
* சீரகம்1 டீஸ்பூன்
* கறிவேப்பிலைஒரு கொத்து
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
சாதத்தை வடித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தையும் கோவக்காயையும் நீளமாக நறுக்கவும். தாளித்த பொருட்களுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கினவுடன் கோவக்காயைச் சேர்த்து உப்பு, சாம்பார்பொடி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.
தனியே வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு நிலக்கடலையை வறுத்து கோவக்காய் கலவையுடன் சேர்க்கவும்.
கோவக்காய் வெந்தவுடன் அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாற்றை விட்டு ஆற விட்டு சாதத்துடன் கலக்கவும்.
கருத்துகள் இல்லை